அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்.
எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கேயும் ஒரு குட்டிக் குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையேயான பாசம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஒரு அம்மாவும், அவரின் குட்டிக் குழந்தையும் வசித்து வந்தனர். அந்தக் குட்டிக் குழந்தையும், அம்மாவும் அமர்ந்திருந்த இடம் ஜனநெருக்கடியில் மிதக்கிறது. அந்தவழியாக டூவீலர்களும், காரும் அதிகமாக சென்று கொண்டே இருக்கிறது. அந்த சூழலுக்கு இடையிலும், அந்த குட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் மிகவும் செல்லமாக கொஞ்சி விளையாடுகிறது. அந்த சாலையோர வாசியான தாயும் அதேபோல் குதூகலத்துடன் குழந்தையோடு விளையாடுகிறார். இந்தக் காட்சியை ஒருநிமிடம் பார்த்தாலே நம்மையும் அறியாமல் தாய்மை உணர்வு மேல் எழுகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.