சின்ன கவுண்டர் படத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் நடிகை சுகன்யா. இவருக்கு மாற்றாக எந்த நடிகை நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக அந்த கதாபாத்திரம் இருந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். அவரின் நடிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது. கதாநாயகியாகவும், நகைசுவை காட்சிகளிலும், வீரத்துடனும், துடுக்கு தனத்துடன் மிக இயல்பாக நடித்திருப்பார்.
சுகன்யா அவர்கள் ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகினார். இவரை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் சுகன்யா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஆர்த்தி தேவி , இவர் சென்னையில் தந்தை ரமேஷ் மற்றும் தாயார் பாரதி அவர்களுக்கு முதல் மகளாக பிறந்துள்ளார். இவர் பரதநாட்டிய கலையில் புலமை பெற்றுள்ளார். DD தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.
90-ஸ் காலங்களில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியன் படத்தில் உலக நாயகனுடன் இணைந்து நடித்ததால் இவர் லேடி கமல்ஹாசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பிற்காக ஐந்து முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். 2002-ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீ தர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கருது வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டார்.
அமெரிக்காவில் இருந்து திருப்பிய பின்னர் சன் தொலைக்காட்சிகளில் ஆனந்தம் தொடரில் நடித்து மக்களிடம் மீண்டும் பிரபலம் ஆனார். தற்போது மலையாளம், தமிழ் மொழி தொடர்களில் நடித்து வருவது குறிப்படத்தக்கது. சமீபத்தில் அவருடைய பிறந்த நாளை கொண்டாடியதுடன் அதனை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரை வாழ்த்திய ரசிகர்கள் இளமை குறையாமல் இருப்பதால் அவரது வயதை நம்பமுடியவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள். அவரது புகை படத்தினை இங்கே காணலாம்