Site icon

பிரபல நடிகரின் இயக்கத்தில் வெளியாகும் சூர்யாவின் 45-வது படம்…… யார் அந்த இயக்குனர் தெரியுமா…..??

தமிழ் சினி உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று ரசிகர் நற்பணிமன்றம் வைக்கும் அளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர் கடின உழைப்பாலே மட்டுமே வெற்றி பெற்றார் எனலாம். ஒவ்வொரு படத்திலும் தனக்கென கொடுத்திருக்கும் கதாபாத்திரமாகவ மாரி இருப்பார் . இதைத்தொடர்ந்து அவர் பல முன்னணி படங்களை நடித்து வெற்றி கொடுத்துள்ளார்.

தற்போது இவரின் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படம் வெளிவர இருக்கிறது. இப்படம் அக்டோபர் 10-ஆம் தேதியே வெளிவர இருந்த நிலையில் வேட்டையன் படம் வெளியீட்டால் படத்தை அடுத்த மாதம் வெளியிட போவதாக படக்குழு தகவல் கொடுத்துள்ளது . இதை தொடர்ந்து சூர்யா அவர்களின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பதை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இவர் வேற யாரும் இல்லை மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியும் நடித்தும் வெற்றி கொடுத்த ஆர்ஜே பாலாஜி அவர்கள் தான் . இசையமைப்பாளராக இப்படத்தில் ரகுமான் அவர்கள் உள்ளார் . இவர்களின் கூட்டணி எப்படி இர்ருக்குமோ என ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

Exit mobile version