Site icon

திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த நாக சைதன்யா மற்றும் சோபிதா.. வெளியான புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நாகார்ஜுனா. தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய முதல் மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் திருமணம் செய்து அவர்களது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்தது.

மேலும் நாகா சைதன்யாவும் நடிகை சோபிதாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியில் பாராவி வந்த நிலையில் அவர்களுடைய காதலை இருவரும் உறுதி செய்தனர்.  மேலும் இவர்களுக்கு அண்மையில்  திருமண நிச்சயம் முடிந்தது. இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த 4 ம் தேதி வெகு விமர்சசையாக நடந்து முடிந்தது.

இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்த கையோடு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர. அப்போது எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

Exit mobile version