நடிகர் தனுஷ் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருடைய இயக்கத்தில் இவர் நடித்த படம் தான் ராயன். இந்த படத்தினை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை இயக்கி வருகிறார். தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அனிக்கா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியார் மேலும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகனும் நடனம் ஆடி உள்ளார். மேலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த படம் பிப்ரவரி 7 ம் தேதி வெளியாக உள்ளதாக தனுஷ் அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ள்ளார். தனுஷின் இந்த படத்தை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். மேலும் இந்த படம் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.