சன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவங்க தான் நடிகை அனிதா சம்பத். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்ப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கலந்துள்ளார். மேலும் இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க கூடிய ஒரு நபர்.
மேலும் அவர் அடிக்கடி எடுக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை அவருடைய சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வரும் நபர். மேலும் இவர் ஒரு யூடுப் சேனல் நடத்தி வருகிறார். அதுமட்டும் அல்லாமல் பெண்களுக்கான குரூப் 2 ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். மேலும் இவர் கலைஞ்சர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனிதா சம்பத் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் காசுக்காக மைனர் பொண்ணுங்களை வைத்து பிஸ்னஸ் பண்றவன், அவனை உங்களுக்கு தெரிந்தால் அவனிடம் ஜாக்கரதையாக இருங்கள் என்று சொல்லி அவனுடைய போட்டோவை இன்ஸ்டாகிராமல் ஷேர் செய்துள்ளார். தகாத வீடியோவை அவருடைய chatல் அனுப்பி உள்ளாராம். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.