‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்னும் பழைய திரைப்படப் பாடலை போலத்தான் திருட்டும். அந்தவகையில் கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதுபோல் நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் மெடிக்கல் ஷாப் ஒன்றுக்கு தலையில் ஹெல்மெட் அணிந்தபடி இரண்டு திருடர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கடைக்காரரை மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த பணத்தை வாங்கினர். அப்போது அந்த கடைக்கு மருந்து வாங்க மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் நடந்து கொண்டிருந்த சம்பவத்தைப் பார்த்து மிகவும் பதட்டமாகிப் போனார்
பாட்டியின் முகம் களேபரமாக இருப்பதைப் பார்த்து,திருடர்களில் ஒருவன் பாட்டியின் அருகில் போனான். அவன் பாட்டியிடம் இருந்து எதையும் திருடப் போகவில்லை. மாறாக, பாட்டியின் முகத்தில் அழுத்தமாக முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி பயத்தைப் போக்கினான். இந்த திருட்டு வழக்குத் தொடர்பாக போலீஸார் விசாரித்துவரும் நிலையில், பாட்டியின் மீது அவர்கள் காட்டிய கரிசனம் சிசிடிவி காட்சிகள் மூலம் இப்போது வைரலாகி வருகிறது.