Site icon

பலதரப்பட்ட பலன்களைத் தரும் திரிபலா பொடி.. இதை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கூட்டுங்க..

திரிபலா ஒரு பாரம்பர்ய பெருமைமிக்கது. அதை சாப்பிட்டு வந்தாலே பல நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கும்.

அது என்ன திரிபலா என்கிறீர்களா? கடுக்காய் ஒரு பங்கு, தாந்திரிக்காய் இரண்டு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நேரடியாக வெயிலில் வைக்காமல் நிழலில் போட்டு நன்றாக உலர்த்த வேண்டும். அதன் பின் இவற்றை நன்றாக பொடி செய்தால் அது தான் திரிபலா பொடி.

வீட்டிலேயே இதை எளிமையான முறையில் தயாரிக்கலாம். அப்படி முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கிப் பயன்படுத்தலாம். இந்த திரிபலா பொடியை தினசரி இரவில் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

அதில் முக்கியமானது இந்த திரிபலா பொடி நம் முதுமையைத் தள்ளிப் போடும். இளமையோடு வைத்திருக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். திரிபலா பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயநோய் வராது. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலும் இந்த திரிபலா பொடிக்கு உண்டு. செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த திரிபலா பொடி அருமருந்து. இது உணவுப்பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கி குடல் இயக்கத்தையும் சீராக்கும்.

மலச்சிக்கல் பிரச்னைக்கும் இது அருமருந்து, வயிற்றில் உள்ள நாடாப்புழு உள்ளிட்ட புழுக்களை வெளியேற்றவும் திரிபலா பொடி கைகொடுக்கும். வயிற்றில் தொற்றுக்கள் வராமல் காக்கும் திரிபலா பொடி அல்சர் நோய்க்கும் மருந்து. இதை தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்களும் ஆறும். ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், இரத்த சோகையை சரி செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் திரிபலா பொடி முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடலில் குளுக்கோஸின் அளவையும் சமநிலைப்படுத்தும். உடலில் தீங்கு செய்யும் கொழுப்பை குறைப்பதும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் திரிபலா பொடி முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சுத்திகரிப்பு செய்து, தோல் நோயையும் விரட்டக் கூடிய ஆற்றல் திரிபலா பொடிக்கு உண்டு. சருமத்தை அழகாக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்களும் இதை சாப்பிட்டு வர நல்ல மாற்றத்தை உணரமுடியும். கண்பார்வையை சரி செய்து விடும். எல்லாம் ஒகே…இந்த திரிபலா பொடியை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதில் தான் சூத்திரம் இருக்கிறது.

அதாவது மழைக் காலங்களில் சூடான வெந்நீரிலும், கோடை காலத்தில் பச்சை தண்ணீரிலும், குளிர் பனி காலங்களில் நெய் மற்றும் தேனிலும் கலந்து சாப்பிடலாம். உங்க வீடுகளிலேயே திரிபலா பொடியை தயார் செய்து விடலாம். இல்லையென்றால் உங்கள் ஊர் நாட்டு மருந்து கடைகளிலும் கூட கிடைக்கும் வாங்கி பயன்படுத்துங்கள். நோய் நொடியின்றி வாழுங்கள்.

Exit mobile version