Site icon

வேற லெவல்ல தூள் கிளப்பும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி…! டாப் 5 ல் கூட இடம் பெறாத விஜய் டிவி சீரியல்கள்…!

மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடிப்பது சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தான். வெள்ளித்திரையில் வரும் படமானது வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். அனால் சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தான் மக்களுக்கு முழுநேர பொழுது போக்காக உள்ளது. அதுவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்கிற அளவிற்கு ஆகிறது. அதிலும் சில சீரியல்களில் வீட்டில் நடப்பதை அப்படியை திரையில் கட்டுவது போன்ற காட்சிகளும் வருகிறது.

சீரியல் மட்டும் இல்ல சீரியலில் வரும் நடிகர்களும் இப்பொது மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளனர். அதே நேரம் வாரத்திற்கு ஒரு முறை சீரியல்களில் எது டிஆர் பி தரவரிசையில் இடம் பிடிக்குது என்ற பட்டியல் வெளிவரும். அதில் எப்போதும் விஜய் டிவி சீரியல்களுக்கு சன் டிவி சீரியல்களுக்கு தான் போட்டி நடந்த வண்ணம் இருக்கும். அதிலும் சன் டிவி சீரியல்கள் டிஆர் பி பட்டியலில் முதல் 5 இடத்தையும் தக்க வைத்து உள்ளது.

விஜய் டிவி சீரியல் முதல் 5 இடத்தில் கூட இடம் பிடிக்கவில்லை. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் முதல் இடத்தையும் சிங்க பெண்ணே சீரியல் இரண்டாவது இடத்தையும் மூன்று முடிச்சு சீரியல் மூன்றாவது இடத்தையும் மருமகள்,சுந்தரி, ராமாயணம் என முதலில் ஆறு இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்து விட்டன. ஏழாவது இடத்தில் தான் தற்போது விஜய் டிவி சீரியல் சிறகடிக்க ஆசை சீரியல் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மல்லி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கார்த்திகை தீபம் சீரியல்கலும் அமைந்துள்ளன.

Exit mobile version