ஓட்டுனர்களின் சாமர்த்தியம் தான் பலரை வாழவும், சிலரை வீழ்த்தவும் செய்யும். என்னதான் பெரிய ஓட்டுனர்களாக இருந்தாலும் கண் இமைக்கும் நொடியில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
அதிலும் ஓட்டுனர் மிகவும் திறமையுடையவராக இருந்துவிட்டால் எப்படிப்பட்ட சாலையிலும் மிக சாதுர்யமாக வாகனத்தை ஓட்டிவிடுவார். அதே பலவீனமான, போதிய விழிப்புணர்வு இல்லாத டிரைவராக இருந்தால் ஒழுங்கான வழித்தடத்தில் கூட சரியாக வாகனத்தை ஓட்டத் தெரியாமல் நிலைகுலைய வைத்துவிடுவார்.
அதிலும் மலைப் பகுதிகளில் வாகனத்தை ஓட்டுவதே மிகவும் சவாலான விசயம். அதிலும் அதிக எடையுடன் கூடிய டிரக்கர் லாரிகளை மலைப்பகுதியில் ஓட்டிச் செல்வது மிகவும் அபாயகரமானது. அதனால்தான் அந்தப் பணிகளுக்கு தகுந்த அனுபவம் உள்ள டிரைவர்களே பயன்படுத்தப்படுகின்றனர். இங்கேயும் அப்படித்தான், ஒரு டிரக்கர் லாரி மலைப்பிரதேசத்தில் சென்றது. அதிலும் அந்த லாரியைத் திருப்ப முடியாமல் ஓட்டுனர் ரொம்ப கஷ்டப்படுகிறார். கடைசியில் போராடி அவரே திருப்பிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இந்த டிரைவரின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும்தகும்!..