
தமிழக வெற்றிக் கழகத்தின் கமுதி தெற்கு ஒன்றிய இளைஞரணி இணை அமைப்பாளர் முருகன் மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக முதல்வராக ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக நலனில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்துவதை மக்கள் அனைவரும் அறிவார்கள். ஆட்சிக்கு வந்ததுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் என ஏராளமான திட்டங்களை அறிவித்து, அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.
அதிலும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பொற்கால ஆட்சியில் தொழில் துறையில் தமிழகம் புதிய உச்சங்களை எட்டியுள்ளது. தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு தவெக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களிலேயே 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிட்டால் தவெக அரசு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணிக்கிறார். இதன் மூலம் தொழில் துறையில் இன்னும், இன்னும் புதிய உச்சங்களை தமிழகம் தொடும். முந்தைய திமுக ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் தமிழகம் தொழில் துறையில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதில் இருந்து இப்போது மெல்ல மீண்டு வருகிறது. அந்த வகையில் முதல்வரின் லண்டன் பயணமும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை படைக்கும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
