Site icon

கோவில் திருவிழாவில் கேப்டன் விஜயகாந்த் பட பாடலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய சிறுவன், சிறுமி….!

நடனத்தைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நடனம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

பொதுவாக பெரிய, பெரிய பள்ளிக் கூடங்களில் படிப்பவர்களுக்கு நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கிராமப் புறங்களில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற உள்ளூர் கிராமப்புற விசேங்களுக்குத்தான் மேடை ஏறும் வாய்ப்பு கிடைக்கும். இங்கும் அப்படித்தான் …. ஒரு கிராமத்தில் பண்டிகை நடந்து கொண்டு இருந்தது.

அப்போது மேடை ஏறிய ஒரு சிறுவனும், சிறுமியும் கேப்டன் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் இடம்பெற்ற தண்ணாணே பாடலுக்கு செம அழகாக ஆட்டம் போட்டனர்.

அதிலும், இங்கே மேடையில் ஆடும் பொடியன் வேட்டி, சட்டையெல்லாம் போட்டு , கேப்டன் விஜயகாந்த் போன்றே ஆடுகிறார். இந்தப் பொடியனின் ஆட்டம் அச்சு, அசல் கேப்டன் விஜயகாந்த் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்களேன்

Exit mobile version