நம் பாரம்பர்யமான பழங்களில் ஏராளமான சத்துகள் உள்ளன. வேற் எதற்கும் இல்லாத ஆற்றல் நம் இயற்கைக்கு உள்ளது. அதில் ஆப்பிள், கொய்யா மாதிரியான பழங்களுக்கு என்று மட்டும் இல்லை. பாயாசத்தில் சுவைக்காக சேர்க்கப்படும் கிறிஸ்மஸ் பழம் எனச் சொல்லப்படும் உலர் திராட்சையிலும் நிரம்ப சத்துகள் இருக்கிறது.
அதேபோல் பலருக்கும் அதீத உடல் எடை பெரும் பிரச்னையாக இருக்கும். ஓவராக உடம்பு இருப்பவர்களுக்கு சீக்கிரமே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பிரச்னைகள் வந்துவிடும். உடல் எடைக் குறைப்பிலும் உலர் திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. தினமும் இரவு தூங்கும் முன்பு ரெகுலராக ஐந்து உலர் திராட்சைகளை சாப்பிட்டால் அது கண்களில் இருக்கும் நம் செல்களைப் பாதுகாக்கும்.
இதேபோல் உலர் திராட்சையில் பாலிபீனால்கள் என்னும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது மாஸ்குலார் தசை சிதைவு மற்றும் கண்புரையில் இருந்து நம்மைக் காக்கும். அதேபோல் உலர் திராட்சையை தினமும் சாப்பிடும் போது அது உடலில் உள்ள சோடியத்தை உறிஞ்சிவிடும். இதனால் நம் உடலில் இரத்த அழுத்தப் பிரச்னை இல்லாமல் ஆகிவிடும்.
இதேபோல் நம் உடலின் குடல் இயக்கத்தையும் சோடியம் சமநிலைப்படுத்தும். எளிதாக மல வெளியேற்றத்திற்கும் கைகொடுக்கும். இதனால் உடலில் இருக்கும் நச்சுகளும் விரைவில் வெளியேறிவிடும். எலும்புகளுக்கும் இது பலம் சேர்க்கும். இதேபோல் கருப்பு உலர் திராட்சைகளை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சத்துகளை உடல் எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.
உலர் திராட்சையில் அதிகளவு நார் சத்துகள் உள்ளது. இது உடல் எடையைக் குறப்பதிலும், குறிப்பாக இடுப்பு சதையை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும். இதேபோல் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்குமாம். இத்தனை நன்மைகளும் பெற இரவில் 5 லர் திராட்சைகளை சாப்பிட இனியும் மறக்காதீர்கள்.