வீட்டுக்குப் பின்னால் துருப்பிடித்தப் பெட்டியைப் பார்த்தால் நம்மவர்கள் அதை அலேக்காகத் தூக்கி பழைய இரும்புக்கடையில் போட்டு விடுவார்கள். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பழைய பெட்டியை திறந்துபார்த்த குடும்ப்த்தினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘அமெரிக்காவின் நியூயார் நகரைச் சேர்ந்த தம்பதி ஒன்று, தங்கல் வீட்டு புழக்கடையில் மரங்களுக்குப் பின்னால் துருப்பிடித்த நான்கு உலோகப்பெட்டிகளை பார்த்தனர். அதை டிறக்கமுடியவில்லை. தம்பதிகள் போராடித்திறந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 52000 டாலர் இருந்தது. கூடவஏ தங்கம், வைரமும் அதில் இருந்தது.இதை உரியவரிடம் கொடுக்க நினைத்து அந்த தம்பதியினர் தேடினர்.
அப்போது நியூயார்க் நகர போலீஸின் உதவியை நாடினர்.6 மாதங்கள் போலீஸ் ஒருபக்கமும் இந்த தம்பதி ஒருபக்கமுமாக தேடியும் பெட்டியின் சொந்தக்காரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த பெட்டியில் இருந்த பணத்தை நல்லகாரியங்களுக்குப் பயன்படுத்த முடிவுசெய்த போலீஸார் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிட்சைக்காக அதைக் கொடுத்துவிட்டனர்.
இந்த பணத்துக்கு ஆசைப்படாத அந்த தம்பதிக்கு பெட்டியில் இருந்த தங்கம், வைரநகைகளை பரிசாக அவர்களுக்கே வழங்கியுள்ளது நியூயார்க் போலீஸ்..அட்ரா சக்கை!