Site icon

வீர தீர சூரன் – 2 படத்தில் பாசமுள்ள அப்பாவாக நடிகர் விக்ரம்.. வெளியானது படத்தின் டீசர்..!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான விக்ரம் நடிப்பில் வெளிவரும் படம் தான் வீர தீர சூரன் -2. இந்த படத்தினை இயக்குனர் அருண் குமார் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 இந்த படத்தில் மளிகை கடையை நடத்தி வரும் விக்ரம் பெண் குழந்தையை பாசமுடன் பார்த்துக் கொள்ளுவது போலவும் மேலும் துஷாரா விஜயனுடன் காதலை வெளிப்படுத்துவது போன்றும் மேலும் போலீனா எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதுவது போன்றும் உள்ளது.

மேலும் படத்தின் டீசரில் கிராமத்தில் பல சரக்கு கடை நடத்தும் விக்ரமின் மகளுக்கு எதோ நிகழ்கிறது அதற்க்கு விக்ரம் பழி வாங்குவது போன்று  காட்டப்பட்டுள்ளது.  மேலும் மதுரையை கதைக்களமாக வைத்து  ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

Exit mobile version