தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி.லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த 28 ம் தேதி டீசர் வெளிவந்தது. டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தினை குறித்த புதிய அப்டேட் ஓன்று வெளிவந்துள்ளது. அதாவது பட பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அஜித் தனக்கு பயிற்சி அளிப்பவர் சொல்லி தருவதை கவனமாக பார்த்து கொண்டுள்ளார். அதில் அவர் கெத்தாக நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2