தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் படம் தற்போது வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தளபதி 69. மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தான் ஜேசன் சஞ்சய். இவர் தன்னுடைய தந்தையை போல் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய தாத்தாவை போல் இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் தற்போது ஒரு படத்தினை இயக்கி வருகிறார் அதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் நடிக்கிறார். மேலும் இவர் இறுதியாக தனுஷின் ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர்.
மேலும் இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. இதில் படத்தின் இயக்குனர் ஜேசன் சஞ்சய் மற்றும் ஹீரோ சந்தீப் கிஷான் உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் சஞ்சய் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.