Site icon

விஜய் சேதுபதியுடன் கைகோர்த்தார் இயக்குனர் பாண்டிராஜ்…! கடலோர பகுதிகளில் ஷூட்டிங்…! வெளியானது புதிய படத்தின் தகவல்கள்…!

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். இவருக்கு முதல் படமே வெற்றி படமாக தான் அமைந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வி அடைந்தது.

ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சத்தியம் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு என்று ஒரு கூட்டம் ரசிகர்கள் உண்டு. வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் இப்பொது சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டுக்கு நடுவே படமும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் கதை களத்திற்கு ஏற்றவாறு கடலோர பகுதிகளில் வைத்து இதன் ஷூட்டிங் நடக்கிறதாம். மேலும் திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற கடலோர இடங்களில் வைத்து இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறுமாம். மேலும் இந்த படத்தினை எதிர்பார்த்து உள்ளனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

Exit mobile version