Site icon

வில்லன் நடிகருக்கு தியேட்டரில் விழுந்த தர்ம அடி… படம் பார்த்துவிட்டு ஆக்ரோஷமான பெண் ரசிகை…

சினிமா என்றாலே அதில் வரும் வில்லன்களை பொதுவாக யாருக்கும் பிடிப்ப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் லவ் ரெட்டி என்கிற படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்காக படக்குழு தியேட்டர்க்கு சென்றுள்ளது. ஹைதெராப்பாத்தில் வைத்து ஒரு தியேட்டரில் படம் முடிந்த வுடன் பட குழுவினர் மேடை மீது ஏறி படம் பார்க்க வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக நின்றுள்ளனர்.

அந்த படத்தில் காதலர்களை பிரித்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த என். டி. ராமசாமியும் மேடையில் நின்றுள்ளார். அந்த நேரத்தில் மேடைக்கு திடீரென ஒரு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருகில் சென்று அவருடைய சட்டையை பிடித்து அவரை சரமாரியாக ஆக்ரோசமாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த சக நடிகர்கள் அந்த பெண்ணை தடுக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் தடுக்க முயற்சி செய்துள்ளனர். அந்த பெண் செய்த காரியத்தால் திடீரென தியேட்டரில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version