“இப்போ புரியுதா” அஜித் சொன்ன ரகசியம் .. கங்குவா பட ப்ரோமோஷனில் சூர்யா சொன்ன தகவல்கள் ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் தற்போது நடித்து உள்ள படம் தான் கங்குவா. இந்த படம் நவம்பர் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் முக்கிய ரோலில் வருவதாக கூறப்படுகிறது.. மேலும் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் வேலையை சூர்யா, திஷா பதாணி, பாபி தியால் ஆகியோர் கலந்து கொண்டு செயலாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. வட இந்தியாவில் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் பணி நடைபெறும் போது நடிகர் சூர்யா பேட்டி ஓன்று அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் அஜித்தை அண்மையில் சந்தித்ததாகவும் “இப்போ தெரியுதா” நான் ஏன் சிவா சாரை விடவில்லை என்று என சொன்னதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்ததாகவும் மேலும் அஜித் சிவாவோட படத்தில் சந்தோசமாக நடிப்பதாகவும் கூறி இருந்தார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற வெற்றி படங்களை நடித்துள்ளார். மேலும் மறுபடியும் இவர்கள் கூட்டணி அமைத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.