Site icon

சாணக்கிய நீதிபடி இந்த குணம் உள்ளவர்களை தவிர்த்து விடுங்கள்……வாழ்வில் சந்தோஷமாக வாழலாம்……

முன்னொருக்காலத்தில் அரிஞர் ஆகவும், ராஜதந்திரியாகவும் மிகவும் பிரபலமாக இருந்தவர் தான் சாணக்கியர். இவரின் நீதிகள் இன்றளவும் பெரிது பேசப்பட்டு வருவதுடன் பல புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. சாணக்கிய நீதியின் படி ஒருவர் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் சில நபர்களை தவிர்ப்பது நல்லது என குறிப்பிடப்படுகிறது.

இதனடிப்படையில் முதலில் யாருடைய பேச்சையும் கேக்காதவர்களை தவிர்ப்பதே நல்லது. இவர்கள் யாரைப்பற்றியும் யோசிக்காமல் எனக்கென்ன என வாழ்பவர்களாக இருப்பர். இவர்களால் சுற்றி உள்ளவர்களுக்கும் ஆபத்தே தவிர எந்த ஒரு நன்மையும் கிடையாது. எனில் யார் பேச்சையும் கேக்காதவர்களை தவிர்ப்பது நல்லது

.இரண்டாவதாக அக்கறை இல்லாத பெண்கள். இவர்களால் வீட்டிற்கு பெரும் கேடு வருமே தவிர நிம்மதி இருக்காது. குடும்ப வாழ்கையில் கணவன், குழந்தை, அப்பா, அம்மா போன்றோர் மீது அக்கறை இல்லாத பெண்களை தவிர்ப்பதே நல்லது.

மூன்றாவது பணத்தை பற்றி மட்டுமே யோசிப்பவர்கள். சிலர் சம்பாதித்துக்கொண்டே இருப்பார்களே தவிர தேவைக்கு கூட செலவு செய்ய மாட்டார்கள். இவர்களுடன் வாழ்வதும் மிக மிக கஷ்டம். எனவே இவர்களை தவிர்ப்பதும் நல்லது.

நான்காவது எப்போதும் ஒருவரை குறை கூறுபவர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவர்களுடன் ஒரு நாள் கூட நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாது

Exit mobile version