Site icon

மறுபடியும் விஜய் உடன் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே…. இணையத்தில் பரவும் அழகான புகைப்படங்கள்..!!

Beast படத்தில் விஜய் உடன் ஜோடியாக இணைந்து அரபிகுத்து பாடல் மூலம் அரபி அழகியாக இளைஞர்கள் மனதில் பதிந்தவர் தான் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இவர். ஆனாலும் பீஸ்ட் படத்தின் மூலமே இவரை அனைவரும் அறிவர்.

தளபதி நடிப்பில் இறுதியாக வெளியான படம் கோட். அதில் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் 1000 கோடி மேல் வசூலை எதிர் பார்த்த நிலையில் 500 கோடி மேல் தான் வசூல் பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி அரசியல் பணியில் மும்மரமாக ஈடுபட்டாலும் தளபதி 69 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தளபதி 69 படத்திற்கு பூஜை போட்டு தொடங்கப்பட்டது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கப்படும் இப்படம் சதுரங்க வேட்டை, நேர் கொண்ட பார்வை, வலிமை,தீரன் போன்ற படங்களை போன்று வெற்றி வசூலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இப்படத்தில் விஜய் உடன் மறுபடியும் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே நேற்றைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது

Exit mobile version