பொதுவாகவே அனைவரும் கயிறு கட்டுவது வழக்கம் தான். ஏதாவது கோயிலுக்குப் போனால் கூட சாமி முன்பு வைத்த கயிறு கொடுப்பார்கள். அதை வாங்கி பலரும் கைகளில் கட்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம். ஆனால் சிலர் கைகளில் மட்டும் இல்லாது, கால்களிலும் கயிறு கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம்.
அது ஏன் எனத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவைத் தொடர்ந்து படியுங்கள். கால்களில் கருப்பு கயிறு கட்டும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பொதுவாக கருப்பு துக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் நல்ல நாள்களுக்கு சிலர் கருப்பு ஆடை அணிவதைப் பார்த்தாலே வீட்டிலும் திட்டத் துவங்குகிறார்கள். சிலர் ஒரு காலில் மட்டும் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா? அப்படிக் கட்டினால் தீய சக்திகள் நம்மை நெருங்காது. அதே போல் சூனியம், செய்வினை ஆகியவையும் எடுபடாது.
இதேபோல் கண் திருஷ்டி நம்மேல் படாது. பொதுவாகவே நம் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களுக்கு சனீஸ்வரனே காரணம். அந்த சனீஸ்வர பகவானின் பார்வை நம்மீது சினத்துடன் படியும் வேகத்தையும் இது குறைக்கும். சரி இந்த கருப்பு கயிறை எல்லாரும் கட்டிக்கொள்ளலாமா என்றால் கட்டலாம். ஆனால் இந்த கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் இருக்க வேண்டும்.
அதேபோல் இந்த கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டுவது உத்தமம். அப்படி கட்ட முடியாவிட்டால் மதியம் 12 மணிக்கும் கட்டலாம். அதிலும் வலது காலில் சனிக்கிழமையில் கட்டிக்கொள்வது ரொம்பவும் சிறப்பு. இதேபோல் கருப்பு கயிறை அனுமார் கோவிலில் வைத்து துர்கா தேவியையும், ஆஞ்சநேயரையும் மனதில் நிறுத்தி ராம ஜெயம் என்னும் மந்திரத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டே கட்டினால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் சூழும் என்பது ஐதீகம். நீங்களும் இனிமேல் முயற்சித்துப் பாருங்களேன்.