பொதுவாகவே இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தங்களுடைய சருமத்தை அழகாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அந்த வகையில் பருவ நிலைக்கு ஏற்றவாறு நம்முடைய சருமமும் வறட்சியாக காணப்படும். அந்த வகையில் பலரும் பலவகை கிரீம் களை வாங்கி யூஸ் பன்றாங்க. அது நாளடைவில் சருமத்தில் சுருக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். சருமத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி தன்மை இல்லாமல் இருப்பதற்க்காக எளிய முறையில் ஆன டிப்ஸ் இதோ.
இயற்கை முறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையில் தேன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் இருக்கும் சுருக்கம் மற்றும் வறட்சி காணாமல் போய்விடும். அதுவும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்து விட்டு முகத்தை நன்கு கழுவிவிட்டு அதன் பிறகு தூங்க செல்ல வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தல் நல்ல பலன் கிடைக்கும். மேலும் தேனில் இயற்கையான ஈரப்பதம் இருப்பதாலும், தேங்காய் எண்ணையில் கலந்து பூசுவதால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
மேலும் தேங்காய் எண்ணெய் சருமத்தில் இருக்க கூடிய கொலகொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தின் சுருக்கத்தை தவிர்க்கலாம். மேலும் சூரிய ஒளியினால் ஏற்படும் சர்ம பிரச்சனைகளை குறைப்பதற்கும் சருமத்தை கண்ணாடி போல பளபள பாக்கவும் தேங்காய் எண்ணை மற்றும் தேன் பயன்படுகிறது.