மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது.
பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கேயும் அப்படித்தான்..ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் நல்ல புத்திசாலியும் கூட!
நாயின் உரிமையாளர் தன் வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்தார். அப்போது அந்த நாய் தான் வழக்கமாக சாப்பிடும் தட்டை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓடிவந்தது. முதலில் தனக்கு உணவை வைக்கச் சொல்லி அது சத்தமும் எழுப்பியது. பொதுவாகவே யாரும் சாப்பாட்டுக்கு அவசரப்பட்டால் நீ ஏன் சோத்துக்கு நாயாக பறக்கிறாய்? என கிராமப் பகுதியில் சொல்வார்கள். அதைப் போலவே இந்த நாய் சாப்பாட்டிற்கு ஆளாகப் பறக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன்.
பாஸ் பசிக்குதுல… முதல்ல சோத்த போட்டுட்டு அப்புறம் மொபைல்ல நோண்டுங்க😛 pic.twitter.com/rSNRRbMSQe
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 4, 2021