‘வீட்டுக்கொரு மரம் வளர்போம்’ என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து முன்வைக்கும் விசயம். அதேநேரம் வயலில் இருக்கும் களைச்செடிகளை அகற்றினால் தான் விவசாயி காப்பாற்றப்படுவார். அதேபோல் வாசலில் சில செடிகள் இருக்கவே கூடாது. வாஸ்துப்படி சில செடிகள் இருந்தால் நம் வீட்டையே நிர்மூலமாக்கி விடும். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
செடிகளும், மரங்களும் ஆக்சிஜனை வெளியிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிளுத்துக் கொள்வதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அதையே வாஸ்து சாஸ்திரம், அதிர்ஷ்டம் உண்டாக்கும் செடி, துரதிஷ்டம் உண்டாக்கும் செடி என பிரிக்கிறது. அதாவது வாசனை இல்லாத, முள்கள் நிறைந்திருக்கும் செடியை திரதிஷ்டத்தை தரக்கூடியது என்கிறது சாஸ்திரம். அதேநேரம் முட்கள் நிறைந்து இருந்தாலும் நல்ல வாசனையோடு இருப்பதால் மருதாணி, ரோஜா போன்றவை அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாகத் தான் இருக்கிறது,
வீட்டின் முன்னால், அல்லது வாசலை ஒட்டி நிற்கவே கூடாத செடிகளில் முக்கிய இடத்தில் இருப்பது அரளி. இதை தோஷ நிவர்த்திக்கே பயன்படுத்துகின்றனர். சில பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் கூட அரளிப்பூ பயன்பட்டால்ம் அதை வீட்டின் முன்னால் வளர்க்கக் கூடாது. வீட்டின் பின்னால் இதை வளர்க்கலாம். அதேநேரம் வீட்டின் முன்னால் வளர்த்தால் அண்டை வீடுகளின் ஆதரவும், நட்பும் கிடைக்காது. சதா சர்வநேரமும் பிரச்னை வரும்.
அரளிச்செடி வீட்டு முன்னால் நின்றால் கணவன், மனைவிக்குள்ளும் அடிக்கடி பிரச்னை வரும். குடும்ப ஒற்றுமையையும் சிதைக்கும். அதேநேரம் வீட்டின் முன்னால் துளசி, மருதாணி ஆகியவற்றை வளர்த்தால் ரொம்ப நல்லது. உங்க வீட்டு முன்பு அரளிச்செடி நின்றால் தாமதிக்காமல் அகற்றிவிடுங்கள்.