Site icon

ஜீன்ஸ் பேண்டில் ஏன் இந்த குட்டி பாக்கெட் இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

ஜீன்ஸ் பேண்ட் இன்று இல்லாத இளைஞர்களே இல்லை. இளைஞர்கள் தான் என்று இல்லை. இப்போதெல்லாம் வயோதிகர்கள் கூட ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் சகிதம் வலம் வருவது பேஷன் ஆகிவிட்டது. இந்த ஜீன்ஸ் பேண்டில் உங்களுக்குத் தெரியாத ஒரு விசயத்தை விளக்குகிறது இந்த பதிவு.

ஜீன்ஸ் பேண்டில் ஒரு குட்டி பாக்கெட் இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த பாக்கெட் வரலாற்றுப் பிண்ணனி கொண்டது. இந்த பாக்கெட்டை நம்மில் பலரும் உபயோகித்திருக்கவே மாட்டோம். இந்த டிசைன் முதன் முதலில் சுரங்கங்களில் வேலைசெய்யும் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. பொதுவாகவே சுரங்கப் பணியாளர்கள் தளர்வான ஆடை அணிந்து பணிசெய்ய முடியாது. அவர்களுக்காகத் தான் முதன் முதலில் ஜீன்ஸ் பேண்ட் வடிவமைக்கப்பட்டது.

சுரங்கத்தில் வேலை செய்யும் போது மணி பார்க்க முடியாது. அதனால் அவர்கள் அதில் பாக்கெட் கடிகாரத்தை வைப்பார்கள். அவர்களுக்கு பணியின் போது இடைவெளி எடுக்க நேரம் பார்க்க வேண்டும் என்பதால் இது வடிவமைக்கப்பட்டது. லிவி ஸ்டாரஸ் என்னும் ஜீன்ஸ் பேண்ட் கம்பெனி, தன் லிவிஸ் என்னும் பிராண்டில் தான் இதை அறிமுகப்படுத்தியது. இப்போது பரவலாக பாக்கெட் கடிகாரம் கலாச்சாரம் இல்லாததால் நம்மவர்கள் அதில் சில்லரை காசுகளை போட்டு வைக்கின்றனர்.

அதேபோல் சுரங்கப்பணியாளர்களின் வேலை கடினமாக இருக்கும் என்பதால் தான் ஜீன்ஸ் பேண்டில் இரும்பு பட்டன்களும் வைக்கப்பட்டுள்ளது. அடேங்கப்பா ஜீன்ஸ் பேண்டிற்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறா? என ஆச்சர்யப்பட்டுப் போனீர்கள் தானே?

Exit mobile version