திருமணம் என்ற பந்தம் மூலம் இரு மனங்கள் ஒருமனதாக முடிவெடுத்து மணமக்கள் பெற்றோர் குடும்பங்கள் ஓன்று சேர்ந்து திருமணத்தை முடிவு செய்து திருவிழா போன்று ஏற்பாடு செய்வார்கள். அதற்கு முன்னதாக பெண் பார்க்கும் படலம் இருக்கும்,அதில் வழக்கம் போல் பெண்ணை வர சொல்லி காபியோ அல்லது ஜூஸ்சையோ மணமகள் கொண்டு வந்து மணமகன் மற்றும் மணமகனின் உறவினர்களுக்கு வழங்குவது வழக்கம். மணமகனுக்கு பிடித்த பிறகே மேற் கொண்டு திருமணத்தை பற்றிய முடிவு செய்வார்கள்.இப்படி தான் காலங்காலமாக நடந்து வரும் சம்பிரதாய பழக்க வழக்கம்.
2k-கிட்ஸ் காலத்தில் அனைத்தும் மாறுதல் அடைந்து வரும் நேரத்தில் இங்கே பெண் வீட்டார் மணமகனை பார்க்க சென்ற போது மணமகன் இரு கைகளிலும் ஜூஸ்சை மணமகள் வீட்டாருக்கு வழங்கியது இணையவாசிகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது என்னடா 90-ஸ் கிட்ஸுக்கு வந்த சோதனை ஏற்கனவே மணமகள்கள் மண்மகன்களாக வருபவர் சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும், 6-இலக்க எண்களில் வருமானம் இருக்க வேண்டும், சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும், பேங்க் பேலன்ஸ் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் வைத்திருக்கும் வேலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் 90-ஸ் புலம்பி வரும் நிலையில் இங்கு ஒருவர் கைகளில் ஜூஸ் தட்டில் உறவினர்களுக்கு ஜூஸ் வழங்கி வரவேற்ற விதம் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருமோ என்று கலக்கத்தில் இருப்பதாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பெண்கள் வரதட்சணை கொடுத்த காலம் மலையேறி பெண்ணிற்கு ஆண்கள் வரதட்சனை கொடுக்கும் காலத்தில் இருப்பதாகவும்….இது கலி காலம் என்றும் வேடிக்கையாக கருத்துக்கள் பதிவிட்டு சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்
எவ்வளவு காலம்தான் பொண்ணு கையில காபி கொடுத்து அனுப்புவீங்க…
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 9, 2022
ம்ம்ம்…மாப்பிள்ளை பிடிச்சிருக்கா சொல்லுங்க..
🤪🤪🤪 pic.twitter.com/UCB1oL8qBH