பொதுவாக நாம் பல திருணங்களில் ஆளைத்தான் பார்கிறோம். ஏன் பெண் பார்க்கச் சென்றால் கூட பெண் அழகாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கிறோம். காலை பார்ப்பதில்லை. இனி ஆளை மட்டுமல்ல..காலையும் பாருங்கள்.
ஆம்..பொதுவாகவே சாஸ்திரங்கள் மச்சம் இருக்கும் இடத்துக்கு ஏற்பக்கூட பலனைச் சொல்கிறது. அதில் முக்கியமானது மனைவியின் பாதம். அது எப்படி இருக்கிறதோ, அதைப் பொறுத்து கணவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சாஸ்திரப்படி கட்டைவிரலை அங்குஷ்தா எனவும், இரண்டாம் விரலை தர்ஜானி எனவும், நடுவிரலை மத்யமா எனவும் சொல்வார்கள்.
இதேபோல் நான்காவது விரலை அனாமிகா எனவும், சுண்டுவிரலை கணிஷ்தா எனவும் சொல்வார்கள். இதன் படி ஒரு பெண்ணின் இரண்டாம் விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் அந்தப் பெண் கணவனுக்கு அடங்கமாட்டாள். கணவன் சொல்லைக் கேட்காமல் தன் விருப்பப்படியே நடப்பார். இதனால் கணவனின் நிம்மதி பாதிக்கப்படும். இதேபோல் காலின் விரல்கள் அனைத்தும் பெரிய தோற்றத்தில் இருந்தால் மனைவி மலையின் பாரத்தைப் போலவே அனைத்து சுமைகளையும் தாங்கி கணவனின் வலிகளில் துணைநிற்பாள். இதேபோல் பெண் நடக்கும்போது அவரது நான்காம்விரலும், சுண்டுவிரலும் பூமியில் படாமல் இருந்தால் அவர்களுக்கு கணவர்மீது நம்பிக்கையே இருக்காது.
இதேபோல் சுண்டுவிரலும், நான்காவது விரலும் ஒரே மாதிரி இருந்தால் கணவருக்கு தொழில்நஷ்டம் ஏற்படும். இதேபோல் அனைத்து விரல்களுக்கும் இடையே இடைவெளி அதிகம் இருந்தால் அவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்து காசை கரியாக்கிவிடுவார்கள்.. அப்புறம் என்ன இனிமேல் திருமண பொறுத்தத்தின் போது ஆளை மட்டும் இல்ல…காலையும் பாருங்க..