Site icon

தன் குடும்பத்திற்காக ஸ்பைடர்மேன் ஆக மாறிய தொழிலாளி…

இங்கு ஒரு நபர் தன்னுடைய தொழிலான முட்டை ஏற்றி அதனை இறக்கும் பணியில் உள்ளார். அவரோ முட்டைகளை லோட் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார். அவர் ஆட்டோவில் போகும் பொழுது முட்டைகளை பாதுகாப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்துகிறார். அவர் அந்த முட்டைகள் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காக அவருடைய பாதுகாப்பிற்கு எதையும் பிடிக்காமல் நின்று கொண்டு முட்டைகளை பிடித்து செல்கிறார்.


“செய்யும் தொழில் தெய்வம்” என்பார்கள் அதற்காக நம்முடைய பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் வேலை செய்வது தவறாகும். அந்த நபர் தொழில் மீது கொண்டுள்ள பற்றுக்கு வாழ்த்துக்கள். அதே சமயம் தன்னுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த நபரின் தொழில் மீதான பற்று வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version