இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அனைவருமே ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இணையத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதே நேரம் ஆர்வக்கோளாறில் நாம் பல ஆப்களையும் வைத்திருக்கிறோம். இதெல்லாம் சேர்ந்து நமக்கே ஒரு கட்டத்தில் ஆப்பு வைத்துவிடுகிறது. அதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ட்ரூ காலர்: ட்ரூகாலரை பலரும் பயன்படுத்துவார்கள். இது நமது மொபைலில் இருக்கும் அனைத்து எண்களையும் நகல் எடுத்து சர்வரில் சேமித்துவைத்துக்கொள்ளும் அந்த மொபைல் எண் குறித்த அனைத்துதரவுகளும் அவர்களிடம் இருக்கும். இந்த ஆப் பயனீட்டாளர் தகவல்களை நூதனமுறையில் திருடியிருக்கின்றன.
சூம்.. வீடியோ கான்பரன்சிங்கை எளிமையாக உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட சூம் ஆப், ஊரடங்கு காலத்தில் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆப் பயனாளிகளின் தரவுகளை அவர்களுக்கே விற்றதை இந்திய அரசு கண்டுபிடித்திருந்தது.
டிக் டாக்: சீன ஆப்பான இது சமீபத்தில் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதில் போடும் எந்த வீடியோவுக்கும் காப்புரிமை இல்லை. இதனால் உங்கள் வீடியோக்கள் மிஸ் யூஸ் ஆகும் வாய்ப்பு இதில் அதிகம்.
விபிஎன் ஆப்: இதன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் பார்க்கமுடியும். அந்த நபர் அப்படி அரசுக்கே கடுக்காய் கொடுத்துவிடு மிடுக்காய் பார்க்கும் தரவை வி.பி.என் ஆப் பி.பி.ஓவுக்கு விற்றுவிடுகிறது.
பி612 இது நமது அனுமதியின்றி கேமராவைத்தானே மறைமுகமாக இயக்கும். இதனால் நம் அந்தரங்கம் நமக்கே தெரியாமல் அம்பலமாகும் வாய்ப்பு அதிகம். இனியேனும் இதில் எல்லாம் உஷாராக இருங்கள்.