இன்று நாம் அவசர யுகத்தில் இருக்கிறோம். தரமான பொருள்களை வாங்கும் ஆர்வத்தை விட, அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பொருள்கள் மிக எளிதாக நம் கைக்கு வந்துவிடுகிறது. அந்தவகையில் பொருள்களின் உற்பத்தி செலவை விட அதை விளம்பரப்படுத்தும் செலவு தான் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
சில விளம்பரங்கள் பார்ப்பதற்கு சலிப்பைத் தட்டும். ஆனால் சில விளம்பரங்கள் தான் அடேங்கப்பா எப்படியெல்லாம் சிந்தித்து இருக்கிறார்கள் என எண்ண வைக்கும். இங்கேயும் அப்படியான ஒரு விளம்பரம் இணையத்தில் பெரும் கவனம் குவித்து வருகிறது. ஓ.ஆர்.ஐ என்னும் நிறுவனத்தின் பிளாஸ்டிக் பைக் விளம்பரம் தான்.
இந்த பைப்பை நடுவழியில் போட்டு பிரமாண்டமான ஓவர் லோடு லாரி ஒன்றை அதன் மேல் ஏற்றி இறக்குகின்றனர். வீடியோவுக்காக விளம்பர நோக்கில் இது எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஏற்றி, இறக்கியும் இந்த பைப் எவ்வித சேதமும் ஆகவில்லை. இந்த விளம்பரத்தை யூ டியூப்பில் இதுவரை 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.