டெக்னாலஜிகள் வளர்ச்சியடையாத காலத்தில் மனிதன் நிம்மதியாகவே இருந்தான். ஆனால் இப்போது தொழில்நுட்பங்கள் வளர, வளர மனிதனுக்கு பல்வேறு ரூபங்களில் பிரச்னையும் வருகிறது. அந்தவகையில் இப்போது புதிதாக இன்னொரு பிரச்னை வருகிறது. அதாவது உங்களுக்கே தெரியாமல் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். எப்படியெல்லாம் ஹேக் செய்யப்படும் என்பதை விளக்கும் பதிவுதான் இது. நீங்கள் யூஸ் செய்யாமலே உங்கள் டேட்டா காலியானால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பும் உண்டு.டேட்டா பயன்பாட்டை ஆப் செய்துவைப்பதன் மூலம் நீங்கள் மானிட்டர் செய்யலாம். உங்கள் செல்போனில் தேவையற்ற சப்தங்கள் வந்தாலும் உஷாராக வேண்டும். கைபேசி அடிக்கடி சூடாவது, பேட்டரி சீக்கிரம் தீருவதும்கூட் ஹேக் செய்யப்படுவதன் அறிகுறிகளில் ஒன்றுதான்.
சில நேரம் நமக்கு சம்பந்தமில்லாத சில பைல்கள் நம் செல்போனுக்குள் இருக்கும். கூகுள் பைல் ஆப் மூலம் நாம் இதைத் தெரிந்துகொள்ளலாம். நாம் பயன்படுத்தவே செய்யாத ஆப்கள் உள்ளே இருந்தாலும் நாம் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம். நமது கட்டுப்பாடு இல்லாமலே ஆட்டோமேட்டிக்காக டச் ஆப்சன் செயல்பட்டாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதேபோல் நமது மொபைலில் உள்ள எஸ்.பி.ஒய் ஆப் ஆனது யாரோ ஒருவருக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருப்பதால் சார்ஜ் அடிக்கடி குறையும். செல்போன் கேமரா அடிக்கடி திறக்கப்பட்டாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதைல்லாம் உங்கள் போனில் அடிக்கடி நடந்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்படுகிறது என அர்த்தம். இனி கொஞ்சம் உஷாராகவே இருங்கள்…