‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஆனால் நம்மவர்கள் அதை செய்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் வளர்ச்சிப் பணிகள் என்னும் பெயரில் வீடுகட்டும்போது பல மரங்களையும் வெட்டித் தள்ளுகிறோம். அப்படியானவர்கல் வெட்கித் தலைகுனியும் வகையில் தரமான சம்பவம் ஒன்றை ஒரு நல்ல உள்ளம் செய்து இருக்கிறார்.
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வெங்கடேசன்(32) என்ற மகன் உள்ளார். இவர் அரபுநாட்டில் கப்பலில் பொறியாளராக பணியில் உள்ளார். வெங்கடேசன் தனது பூர்வீக பழைய வீட்டை இடித்துவிட்டு புதுவீடுகட்ட முடிவு செய்தார். இதற்கான லே அவுட் வடிவமைத்தபோதே தன் பிறந்தநாளுக்கு நட்ட வேப்பமரத்தை வெட்டாமல் அதற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வீடுகட்ட லே அவுட் போடப்பட்டது.
இப்போது 30 வயதாகும் அந்த வேப்பமரம் வெங்கடேசனின் 2வது பிறந்தநாளுக்கு நடப்பட்டது இதை முழுவதும் வெட்டாமல் அதன் கிளைகளை மட்டும் வெட்டி..அதன் வேர்ப்பகுதியால் காங்கிரீட் கட்டிடத்துக்கும் பாதிப்பு ஏற்படாதபடி காங்கிரீட் சுவர்கள் எழுப்பியுள்ளார். இப்போது வீட்டின் முன்பக்க கதவின் அருகிலேயே வேப்பமரம் நிற்கிறது. அந்த ஏரியா வாசிகள் வெங்கடேசனின் மர சினேகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.