குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது வழக்கம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அதுவும் பொதுவாக குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருக்கும். அந்த வகையில் குளிர்காலத்தில் பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் அடிக்கடி மூட்டு வலி ஏற்படுவது வழக்கம். அதனை எவ்வாறு வராமல் நாம் பார்த்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
குளிர்காலத்தில் நம்முடைய உடலை பாதிக்காத வண்ணம் சூடான ஆடைகளை அணிய வேண்டும். அது நம்மளை மூட்டு வலி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் அடிக்கடி கை, கால் களை நீட்டி மடக்கி உடல்பயிற்சி செய்யவேண்டும் அது மூட்டு வலியில் இருந்து பாதுகாக்கும். மேலும் மிகவும் பாதுகாப்பான உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். அதுவும் பொதுவாக ஒமேகா 3, விட்டமின் டி போன்ற உணவுகளை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் குளிர்காலத்தில் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மூட்டு வலி வராமல் பாதுகாக்கும். ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டும். டயட் என்பது குளிர்காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் மன அழுத்தம் ஏற்படாத அளவிற்கு மனநிலையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பார்க்க வேண்டும். மேலும் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும். இரவில் தூக்கம் இல்லை என்றாலும் மூட்டு வலி ஏற்படும்.