இந்த ராசிகளுக்கு மட்டுமே இரண்டு பொண்டாட்டி யோகம் கிடைக்குமாம்.. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனச் சொல்வார்கள். சிலருக்கு அது வரமாகவும், சிலருக்கு ஏன் திருமணம் செய்தோம் என்னும் வருத்தத்தையும் தந்து விடுவதுண்டு.அதேநேரம் ஒரே ஒரு மனைவியை வைத்துக்கொண்டே அவன், அவன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு சூழல் செல்கிறது. ஆனால் பலரும் அசால்டாக இரு மனைவிகளை கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் என்றால் அதுவும் ஒரு வரம் தானே?

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது எனச் சொல்வதைப் போல, சிலருக்கு சிலருக்கு ஜாதகப்படியே இரண்டு பொண்டாட்டி யோகம் இருக்குமாம். சரி வாருங்கள் அது எந்த ராசி என பார்த்துவிடுவோம்…

மீனம்…

இவர்கள் தனக்கென ஒரு வாழ்க்கையும், ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்வார்கள். இவர்களுக்கு பொதுவில் எந்த திசை நடந்தாலும், தசை அல்லது புத்திநாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும்போது இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் உண்டு.

துலாம்

இவர்களுக்கு கால புருஷ ஸ்தானம் ஏழாம் இடத்தில் இருக்கிறது. சுக்ரன் தான் இதன் அதிபதி. சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். சனி புத்தியால் இவர்களுக்கும் இரண்டாம் திருமண யோகம் உண்டு.

கடகம்

இவர்களுக்கு 11 ஆம் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். சுக்கிரனின் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இவர்களுக்கு இருதார யோகம் உண்டு.

ரிஷபம்

ராகு இவர்களுக்கு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புருஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம் ஆகும். பொதுவாகவே எட்டாவது இடம் மறைவு ஸ்தானம் என்பதால் இவர்களுக்கு திரை மறைவில் ஊருக்குத் தெரியாமல் இன்னொரு வாழ்க்கை நிச்சயம் உண்டு.

மிதுனம்

இந்த ராசிக்கு லக்னம் கால புருஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் இவர்கள் வாழ்வில் மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். இவர்களுக்கும் இருதார யோகம் உண்டு.

You may have missed