முதன் முதலாக ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தை கொடுத்த ரியாக்சனைப் பாருங்க… பலரது மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

ஒரு குட்டிக் குழந்தை ஒன்று ஐஸ் கிரீமை ரசித்து, ருசித்து சிரித்தபடியே சாப்பிடும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இந்தக் காட்சி நம் மனங்களையும் கொள்ளை கொள்ளச் செய்கிறது.

பொதுவாக சாப்பாட்டைப் பிடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் சாப்பாட்டை பசிக்காக சாப்பிடுபவர்கள், வெறுமனே ருசிக்காக சாப்பிடுபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். சிலர் வாழ்வை நகர்த்துவதற்கு சாப்பாடும் ஒரு அங்கம் என நினைப்பார்கள். இன்னும் சிலரோ, ‘இந்தப் பொறப்புதான் நல்லா ரசிச்சு சாப்பிடக் கிடைச்சுதே’’ என்னும் பிரகாஷ்ராஜின் பாடலைப் போல் ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்வார்கள். அதிலும் குழந்தைகள் எதையாவது சாப்பிட்டால் அந்த அழகை நாம் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

பொதுவாகவே குழந்தையே அழகுதான். அதிலும் அவர்கள் செய்யும் சின்ன, சின்ன சேட்டைகளும், குறும்புகளும் நம்மையே மறந்துபோகும் அளவுக்கு ரசிக்க வைக்கும். இங்கேயும் அப்படித்தான். ஒரு கைக்குழந்தைக்கு அவரது அம்மா ஐஸ் கிரீம் கொடுக்கிறார். அதுவும் முதன் முறையாக ஐஸ் கிரீம் அந்தக் குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. அது எப்படி இருக்கும் என்றே தெரியாமல் நாக்கால் குழந்தை நக்க, அதன் இனிப்பான சுவையைக் கண்டு மெய்மறந்து குழந்தை சிரிக்கிறது. இந்த குழந்தையின் சிரிப்பு, அந்த ஜஸ் கிரீமை விட ஸ்வீட்டாக இருக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

You may have missed