கல்யாணம்னாலே பயம்.. திருமண உறவு குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியான தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலமாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் தனுஷா இயக்கத்தில் காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்தார். அந்த படத்திற்க்காக் தேசிய விருதும் வாங்கினார். இந்த படத்தினை தொடர்ந்து இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிஉடன் இணைத்து பண்ணையாரும் பதமினியும், தர்மதுரை, ரம்மி, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் நடித்தார். சிவக்ரத்திகேயனின் தங்கையாக ஒரு படத்தில் நடித்தார்.

இவர் நடிப்பு அருமையாக இருந்தாலும் இவருக்கு கிராமத்து கதைகள் தான் செட் ஆகும் என்பதால் இவருக்கு சொல்லும் அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவருக்கு என்றும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார் அதுவும் அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை. மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் 2 வருடமாக திருமணம் செய்து கொள் என்று என்னுடைய அம்மா சொல்லிட்டே இருக்காங்க.

கல்யாணம் பண்ணுனா நல்லா வாழனும், விவாகரத்தலாம் செட் ஆகாது. கல்யாணம்னாலே பயமா இருக்குது. ஒருவரை பார்க்கும் போது இவரை காதலிச்சு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். இது வரை அப்படி ஒரு நபரை சந்திக்க வில்லை என்று திருமண உறவு குறித்து பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed