காவலன் படத்தில் வடிவேலுவுடன் நடித்த நடிகையா இவர்… தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க…!

தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பலம் கொண்டவர் வடிவேலு. இவரது நகைச்சுவைகளுக்கு மயங்காதவரே இல்லை. பட்டி, தொட்டியெங்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வடிவேலுவோடு ஒரே ஒரு சீனில் சேர்ந்து நடித்தால் கூட ரசிகர்கள் அவர்களை மறக்க மாட்டார்கள். அந்தவகையில் வைகைப்புயல் வடிவேலுவுடன், காவலன் படத்தில் படத்தில் சேர்ந்து நடித்த நீபாவுக்கும் முக்கிய இடம் உண்டு.

காவலன் படத்தில் பூங்கொடி என்னும் கேரக்டரில் வடிவேலுவுக்கு ஜோடியாக நீபா நடித்தார். இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீரியல்களிலும் நீபா நடித்துவருகிறார். வழக்கமாகவே கவர்ச்சிகாட்டி நடிக்கும் நீபா, ‘தான் கவர்ச்சி காட்டி நடிக்க தன் தந்தையின் உடல்நிலைதான் காரணம்’ எனவும் கூறியிருந்தார்.

அதேநேரம் அவர் சமீபத்தில் கவர்ச்சி குறித்து சில விசயங்களை வெளிப்படையாக பேசினார். பொதுவாகவே கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாகவே மற்றவர்கள் பேசுவார்கள் எனவும், கவர்ச்சியாக நடித்தால் ஈஸியாக யூஸ் செய்யலாம் என நினைக்கிறார்கள். அது தப்பு. உடம்பைக் காட்டினால் கெட்டவர்களோ, முழுக்க மூடிக்கொண்டால் நல்லவர்களோ இல்லை. ‘என பேசியிருந்தார்.,

நீபா முதலில் மானாட…மயிலாட நிகழ்வில் போட்டியாளராகத்தான் கலந்தார். அதில் ரசிகர்களை ஈர்த்தவர், தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி சீரியலிலும் நடித்தார். கடந்த 2013ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட நீபாவுக்கு, பெண்குழந்தை உள்ளது. அம்ம்ணி ரீசண்டாக நடத்திய போட்டோ செம வைரல் ஆகிவருகிறது.

pic1

pic2

You may have missed