இளைய ராஜா-வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற……. அட்டகத்தி தினேஷ் மற்றும் லப்பர் பந்து குழுவினர்….. இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ..!!

அட்டகத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் அட்டகத்தி தினேஷ். இதை தொடர்ந்து திருடன் போலிஷ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு வெற்றி கொடுத்த படம் அட்டகத்தி தான்.

தற்போது இவர் ஜெ பேபி என்ற படத்தில் நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஊர்வசியுடன் நடித்த இப்படம் மிகவும் வெற்றியை கொடுத்தது எனலாம்.

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் நடித்து வெளியான லப்பர் பந்து வெற்றியை கொடுத்து கொண்டிருக்கிறது. இளையராஜா-வின் பாடல் இப்படத்தில் வெளிவந்துள்ள நிலையில் லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜா அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளனர்.

தற்பொழுது இப்புகைப்படங்களை இணையத்தில் பரவி வருகிறது.