உடல் முழுவதும் பாலாவின் புகைப்படத்தை ஒட்டிய ரசிகர்… நேரில் சென்று ரசிகருக்கு செய்த நெகிழ்ச்சி சம்பவம்…

விஜய் டிவி பிரபலம் தான் பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாகத்தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திருக்கிறர். மேலும் தற்போது சினிமாவிலும் நடிகராக வலம் வருகிறார்.

மேலும் இவர் சமூக ஆர்வலராகவும் தொண்டாற்றி வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும் தன்ககு கிடைக்கும் வருமானத்தில் பாதியை இல்லாத மக்களுக்கு உதவி செய்து சேவை ஆற்றி வருகிறார். இவர் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியும் கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோவும் விவசாயிகளுக்கும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி என அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரின் உதவி செய்யும் குணத்தை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் இவரை பாராட்டியும் இவரையும் தன்னுடன் இணைத்து கொண்டு இருவருமாக சேர்ந்து இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலாவின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய உடல் முழுவதுமாக பாலாவின் புகைப்படங்களை ஒட்டிய வாரு பாலாவை பார்ப்பதற்கு ஆசை பட்டுள்ளார்.

இந்த ரசிகர் உடல் நலம் சரியில்லாதவர் எனவும் அதனால் பாலா உதவி செய்வர் எனவும் நினைத்து அவருடைய போட்டோஸ்களை ஒட்டியுள்ளார் என அவருடைய மனைவி கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த பாலா தன்னுடைய ரசிகரை சந்தித்தும் அவருக்கு பண உதவி செய்ததாகும் தெரியவருகிறது. பாலாவின் இந்த உதவும் மனதை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.