லப்பர் பந்து பட நடிகையின் கணவர் விஜய் டிவி சீரியல் நடிகரா…? பார்த்ததும் ஆச்சரியத்தில் வியந்த ரசிகர்கள்…!
சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயின் சஞ்சனாக்கு அம்மாவாக சுவாசிகா பிக்ஸ் நடித்துள்ளார்.
மேலும் அவர் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இவரை யார் என்று தெரியாமல் இவர் நடித்த முதல் படம் இது தான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை சுவாசிகா பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கால் பதித்துவிட்டார். ஆனால் அவர் நடிப்பில் வெளிவந்த வைகை, கோரிப்பாளையம், சாட்டை போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. லப்பர் பந்து படத்தின் மூலமாகத்தான் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
மேலும் இதனை தொடர்ந்து மலையாள திரையுலகிற்கு சென்ற இவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர் தற்போது தான் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார். மேலும் இவர் விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியலில் ராகவ் என்ற பெயரில் ஹீரோவாக நடித்திருக்கும் பிரேம் ஜேக்கப் என்பவரின் மனைவியாம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம். மேலும் இவர்கள் திருமணத்தோடு எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரா அவருடைய கணவர் என ஆச்சரியத்தில் வியந்தனர். மேலும் தம்பதிகளுக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.