இளைய ராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டாரின் குரலில் ஹிட் ஆன சூப்பர் ஹிட் பாடல்… எதுதெரியுமா…!

தமிழ் சினிமாவில் முன்னனி பிரபலமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தான் வேட்டையன். அந்த படம் கடந்த 10 ம் தேதி வெளிவந்தது. டி ஜே ஞான வேல் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் அமிதாப்பச்சன் ராணா பகத் பாசில் மஞ்சு வாரியார் ரித்திகா சிங் என பல பிரபலங்கள் நடித்துள்ளன. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அதாவது ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பிலும் நடனத்திலும் ஸ்டைலிலும் கலக்குவார் என்று அனைவருக்குமே தெரியம் இவரின் நடிப்பை பார்த்து இவருடன் நடிப்பதற்கு பல பிரபலங்கள் ஆசை பட்டுள்ளன.மேலும் தன்னுடைய 73 வயதிலேயும் இளைய தலை முறையினருக்கு டப் கொடுக்கும் அளவிற்கு இன்றும் சினிமாவில் கலக்கி வருகிறார். அதற்க்கு தற்போது வந்த வேட்டையன் படம் கூட ஒரு உதாரணம் தான். மேலும் இவரின் படங்கள் வசூலிலும் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ஒரு படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்த பாடலும் பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட் அடித்த பாடல் அது என்ன பாடல் தெரியுமா.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சிவாஜி ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் மன்னன். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக விஜயசாந்தி நடித்திருந்தார். மற்றும் ஒரு கதாநாயகியாக குஷ்பூ நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் ஒரு பாடலான அடிக்குது குளுரு என்ற பாடலை சூப்பர்ஸ்டார் தன்னுடைய குரலில் பாடகி ஜானகியுடன் இணைந்து பாடியுள்ளார். இவர் பாடிய இந்த பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.