நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கிறதா… அவரின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா… வெளியான குடும்ப புகைப்படம்…!
தமிழ் சினிமாவில் 90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வினீத். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஆவாரம் பூ என்ற படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவர் இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் இவர் இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மேலும் இவர் நடிப்பையும் தாண்டி ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவர். பல பரதநாட்டிய கச்சேரிகளில் தன்னுடைய திறமையும் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இவர் பாரதநாட்டியத்தின் மீது உள்ள ஆர்வத்தினால் பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
இந்த நிலையில் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்த அவர் மீண்டும் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். மேலும் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருக்கும் அவர் பிரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இவருடைய அழகிய குடும்ப போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.