தன்னுடைய அம்மா வாங்கிய கடனை அடைக்கவே நடிகராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்… நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பகாலத்தில் மிகவும் போராடினர் அப்போது அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் தான். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தினை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரின் படம் வெளியாக போகிறது என்றாலே இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் தற்போது நடித்து உள்ள படம் தான் கங்குவா.மேலும் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்து கொண்ட சூர்யா தான் சினிமாவிற்கு வருவதற்க்கே என்னுடைய அம்மா தான் காரணம் என்றும் அவர்கள் என்னுடைய அப்பாவிற்கு தெரியாமல் வாங்கிய இருபத்தைந்தாயிரம் கடனை அடைக்கவே தான் சினிமாவிற்கு நடிக்க வரவேண்டும் என்ற முடிவெடுத்ததாகவும் உருக்கமாக பேசி உள்ளார். அவர் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.