மன அழுத்தத்தால் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன் இயக்குனர் செல்வராகவன்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவன் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். பல வெற்றி படங்களை இயக்க்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் தற்போதெல்லாம் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் ராயன். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு வீடியோ பதிவிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருக்கிறார். உலகம் முழுவதும் பார்த்தாலும் இந்த இரண்டையும் அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது என்று அந்தவது ஓன்று தற்கொலை இன்னொன்று மன அழுத்தம். மன அழுத்தத்தினால் அவரும் ஏழு முறை தற்கொலைக்கு ,முயற்சி செய்துள்ளாராம். பல வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி செய்துள்ளாராம். அவர் தற்கொலைக்கு முயலும் பொழுது ஏதோ ஒன்று மனதில் கேட்ட மாதிரி இருக்குமாம் அதாவது கடவுள் எதோ சொல்கிறார் என்று விட்டுவிடுவாராம். அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து வாழ்க்கை அழகாக இருக்கும் பொழுது தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என நினைப்பாராம்.

மேலும் தற்கொலை செய்தால் அடுத்த ஜென்மத்திலாவது வாழ்க்கை அழகாக இருக்கும் என்று நினைத்து தான் இந்த மாதிரி முடிவு எடுக்க தோன்றும் ஆனால் அவ்வாறு கிடையாது. நம்மக்கு கேட்க்கும் குரல் உண்மையானது அது கேட்க்காமல் இருக்காது அது கடவுளோடாதோ இல்லையென்றால் வேற யாரோடதாகவும் இருக்கலாம் என்று கூறி உள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed