கியூட்டாக குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஷாலினி அஜித்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது காதல் மனைவி தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக ஒரு சில படங்களில்  மட்டும் தான் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை படத்தில் தான் அறிமுகம் ஆனார்.

இதனை தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினால் என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு நடிகர் அஜித் உடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த சமயம் இருவரும் காதலித்து வந்தனர். பின்பு  திருமணம் செய்து கொண்டனர். அதனை தெடர்ந்து அலைபாயுதே படத்தில் நடித்தார் அந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

திருமணத்திற்கு பிறகு தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த அவர் தற்போது  நேற்று அவரின்  பிறந்தநாளை மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், சகோதரி ஷாமினி, மற்றும் சகோதரருடன் இணைந்து  மிகவும் சிறப்பாக கேக் கட் பண்ணி கொண்டாடி உள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed