காதலரை விரைவில் கரம்பிடிக்க உள்ளார் நடிகை தமன்னா.. யார் அந்த காதலர் தெரியுமா..!
தமிழ் சினிமாவில் கேடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, ஜெயம் ரவி போன்றோர்களுடன் நடித்துள்ளார்.பல வெற்றி படங்களில் நடித்த இவர் கவர்ச்சியாக நடனம் ஆடுவதிலும் வல்லவர் இவருடைய நடிப்பு மட்டும் இல்லாமல் இவருடைய நடனத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நடனம் ஆடிய காவலயா என்னும் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் நடிகை தமன்னா பாலிவூட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளுக்கு சென்றனர்.
மேலும் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய தமன்னா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் மேலும் வரும் 2025 ம் ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இவருடைய கணவர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அது பற்றிய தகவலை இது வரையில் தமன்னா தெரிவிக்க வில்லை. விரைவில் தெரிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவருடைய திருமணம் ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றன்ர். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.