கங்குவா படத்தின் எதிர்மறை விமர்சனத்திற்கு பிறகு பிரபல கோவிலில் சூர்யா செய்த யாகம்.. வைரலாகும் போட்டோஸ்கள்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் தான் கங்குவா. இந்த படத்தில் திஷா பதாணி, பசுபதி, பாபி தியால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. மேலும் இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் கலவை விமர்சனத்தையே பெற்று வருகின்றன. வசூலிலும் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவு வசூல் வரவில்லை என்றே சொல்லலாம்.
கங்குவா படத்திற்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்த நிலையில் நடிகை ஜோதிகா அதற்க்கு கண்டனம் தெரிவித்து அவரது பதிவினை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து பலரும் கங்குவா படத்தில் இருக்கும் பாசிட்டிவ் கருத்துக்களை ஷேர் செய்து வந்தனர். மேலும் இதில் பலரது உழைப்பு இருப்பதாலும் மேலும் இந்த படம் எடுக்க கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் ஆனதாலும் நெகடிவ் கமெண்ட்ஸ்க்கு திரைப்பட சங்கத்தினர் தடைகளை விதித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியான நடிகை ஜோதிகா இருவரும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று பிரபலங்கள் செய்யும் தடைகளை மீறி வெற்றி பெரும் சண்டியகத்தினை செய்துள்ளனர். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.