உருகி உருகி காதலிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்… உங்க ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க..

மிக அற்புதமான உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அதன் வீரியம் தெரியும். பருவத்தில் வரும் காதலைவிட வயோதிகத்தில் வரும் காதல் இன்னும் கூட சுகமானது. .

இந்தத் தலைமுறையினர் விரும்பி காதல் திருமணம் செய்கின்றனர். ஆனால் சின்ன, சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் கோபப்பட்டு திருமணம் முடிந்த கையோடே விவாகரத்து வரை சென்றுவிடுகின்றனர். விட்டுக்கொடுத்து போகும் தன்மை அவர்களுக்குள் வெகுவாகக் குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இதுபோன்ற சூழலில் சில ராசிக்காரர்கள் மட்டும் தங்கள் இணையிடம் அதீத அன்பை வெளிப்படுத்துவார்கள். அதில் அவர்கள் கூடுதல் சாமர்த்தியத் தனத்துடனும் இருப்பார்கள். அதில் உங்கள் ராசி இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இவர்கள் காதலில் அதிக நம்பிக்கைக் கொண்டவர்கள். பொதுவாகவே இளகிய மனம் கொண்ட இவர்கள் காதல் வாழ்வின் காட்சிகளைப் பற்றி எப்போதும் சிந்திப்பார்கள். மீன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே காதல் நாவல் படிப்பது ரொம்பப் பிடிக்கும். அதனால் அதற்கு ஏற்பவே வாழ்வார்கள். இதனால் மீன ராசிக்காரர் ப்ரப்போஸ் செய்தால் தயங்காமல் ஒகே சொல்லலாம்.

கடகம்

இவர்கள் காதலில் ரொம்பவே டெடிகேசனுடன் இருப்பவர்கள். அதேநேரம் காதலில் உடல் தேவையையும் இவர்கள் நாடுவார்கள். இருந்தாலும் இவர்களை நம்பலாம். காரணம் இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.

ரிஷபம்

இந்த ராசியில் காதலில் ப்ரபோஸ் வந்தாலும் தயங்க வேண்டியது இல்லை. காரணம், இவர்கள் ரொம்பவும் பாசமானவர்கள். எந்த சூழலும், எத்தனை பேர் முன்னிலையிலும் இவர்கள் தங்கள் பாசத்தைக் காட்டத் தயங்குவதே இல்லை. இந்த ராசி காதலர்கள் பாசத்தைப் பொழிவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களும் காதலில் மிகத் தெளிவானவர்கள். இவர்கள் மீது உண்மையான அன்பைக் காட்டினால் அவர்கள் இருமடங்கு அன்பைத் திருப்பித் தருவார்கள்.

You may have missed